Newsஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

-

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று முன்தினம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்­துள்­ளது.

ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக் கோள் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டொப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியை கொண்டுள்ளது.

இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.

ஏயோலஸ் செயற்கைக்கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கைக்கோளுடன் மோதும் அபாயத்தை குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோத செய்ய முடிவு செய்தது.

ஏயோலஸ் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறகு கிரீன்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் ஏயோலஸ் செயற்கைக்கோள் விழ்ந்துள்ளது. செயற்கைக்கோள் கீழே விழுந்­த திசையை மாற்றியதன் மூலம் அதில் இருந்து சிதறும் பாகங்கள், மக்கள் மற்றும் பிற பொருட்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஆனது தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மாதிரிகள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது, இது வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியது. ஏயோலஸால் சேகரிக்கப்பட்ட தரவு, பல ஆண்டுகளாக வானிலை மையங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.

சுமார் 1,360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மூன்று வருடங்கள் சுற்றுப்பாதையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவப்பட்டது.

ஆனால், அதனைத்தாண்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...