நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.
ஏறக்குறைய ஓராண்டு காலம் மேற்கொள்ளப்படும் இந்த பழுது காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
சில ரயில் அட்டவணைகள் ரத்து செய்யப்படுவதோடு, பராமரிப்பு காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கும்.
ஏறக்குறைய 2000 கி.மீ தூரம் செல்லும் இந்த பராமரிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய தொகை 97 மில்லியன் டாலர்கள்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க வார இறுதி நாட்கள் மற்றும் வார நாள் இரவுகளில் பெரும்பாலான பழுதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும்.