மேற்கு ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பொருள் செயற்கைக்கோள் போக்குவரத்து ராக்கெட்டின் பாகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
பெர்த்தில் இருந்து வடக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் கடந்த 16ம் தேதி இந்த துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஐரோப்பிய-ஆஸ்திரேலிய மற்றும் இந்திய விண்வெளி அதிகாரிகளின் விசாரணையில், இது விபத்துக்குள்ளான ராக்கெட்டின் ஒரு பகுதி என்று இறுதியாக முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில், இந்த விண்வெளிப் பொருளை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், இது இந்திய அரசு அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதி என்பதால், அதற்கு முன் அவர்களின் கருத்தைக் கேட்க நடவடிக்கை எடுப்பதாக மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.