Newsசாதனை படைப்பதாக சென்று உயிரைவிட்ட பிரான்ஸ் பிரபலம்

சாதனை படைப்பதாக சென்று உயிரைவிட்ட பிரான்ஸ் பிரபலம்

-

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30வயது). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.

வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வாடிக்கை. இவருடைய இன்ஸ்டாகிரம் சமூக வலைதளத்தில் இவரை இலட்சக்கணக்கான இரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

ரெமி பலமுறை ஹாங்காங் நாட்டிற்கு சென்று அங்குள்ள உயரமான கட்டிடங்களிலிருந்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். சென்ற வாரம், ஹாங்காங் மத்திய பகுதியில் உள்ள ட்ரெகன்டர் சாலைக்கு ரெமி சென்றார்.

அங்குள்ள ட்ரெகன்டர் டவர் எனும் ஒரு மிக உயரமான கட்டிடத்தில் இருந்து படம் பிடிக்கும் நோக்கில், காவலாளியிடம் ஒரு நண்பனை பார்க்க உள்ளே செல்வதாக பொய் சொல்லி உள்ளே சென்றார்.

லிஃப்டில் ஏறி 49-வது மாடியை அடைந்து அங்கிருந்து வெளியே இறங்கி மாடிக்கு சென்றார். மொட்டை மாடிக்கான கதவின் பூட்டை அவர் உடைத்து கொண்டு மேல் மாடி வரை சென்றார்.

இவர் அங்கிருந்து பல ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது திடீரென நிலை தடுமாறினார்.

இதனால் உதவிக்கு அந்த உச்சி மாடியில் உள்ள சிறிய அறையின் ஜன்னல் கண்ணாடியை பலமுறை தட்டினார். இதை கண்ட உள்ளேயிருந்த பணிப்பெண் திடுக்கிட்டு காவல்துறையை அழைத்தார்.

ஆனால் உதவி கிடைக்கும் முன் 68-வது மாடியிலிருந்து ரெமி தவறி விழுந்தார். மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்தபோது ரெமி உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

Latest news

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...