ரோபோடெப்ட் கமிஷன் அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.
2015ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சராக தாம் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் முற்றாக நிராகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் மொரிசன் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக ரோபோடெப்ட் ஆணைக்குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முன்னாள் பிரதமர், நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்தார்.
இந்த 57 பக்க அறிக்கையை வெளியிட்ட ஆணையம், ரோபோடெப்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.