Newsபரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி - தாயின் கவனக் குறைவே...

பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி – தாயின் கவனக் குறைவே காரணம்

-

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியாகியுள்ளார்.

மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின் படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் நடந்தது.

அந்த ஏரியில் ஒரு படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பொழுதுபோக்கிற்காக சென்றனர். ஏரிப்பகுதியில் அந்த படகு நிறுத்தப்பட்டது. அவர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி விளையாடி கொண்டிருந்தார்.

படகின் பின்புறம் தனது குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் அந்த படகை இயக்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக படகு இயக்கக்கூடிய இயந்திரத்தின் இறக்கையில் சிக்கி சிறுமியின் கால் துண்டானது.

நீந்தி கொண்டிருந்த அச்சிறுமியின் தந்தை படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து வேகமாக அருகே வந்தார். அது தங்கள் மகள் என இருவரும் தெரிந்து கொண்டவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர்.

ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்தனர். பிறகு அருகில் இருந்தவர்களின் படகில் அச்சிறுமியை ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.

ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அச்சிறுமியை கொண்டு சென்றனர். அச்சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறித்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

இது விபத்துதான். இருந்தாலும் நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். படகில் இருந்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...