Newsபச்சை காய்கனிகளை மட்டும் 5 ஆண்டுகளாக உட்கொண்ட பெண் உயிரிழப்பு

பச்சை காய்கனிகளை மட்டும் 5 ஆண்டுகளாக உட்கொண்ட பெண் உயிரிழப்பு

-

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.

‘Vegan’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்.

உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஹனா சம்சனோவா அங்கு கிடைக்கும் காய்கனிகளை உண்பது மற்றும் அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

காய்கள், பழங்கள், பயிறு, இலை போன்ற இயற்கை உணவுகளை சமைக்காமல் பச்சையாக அவர் சாப்பிட்டு வந்தார்.

இதனிடையே, ஹனா சம்சனோவா கடந்த சில மாதங்களாக தனது உணவு பழக்க முறையில் மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இதன் காரணமாக அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார்.

பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஹனா சம்சனோவா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பச்சை காய்கனிகளை தொடர்ச்சியாக சாப்பிட்டதால் உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டு ஹனா உயிரிழந்திருக்கலாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தனது மகளின் உடலை ரஷ்யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி ஹனாவின் தாயார் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...