2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுக்கு எதிரான சதி – பிரஜைகளின் உரிமை மீறல் ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி நாளை வாஷிங்டனில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கேபிடல் கட்டிடத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரகசிய ஆவண மோசடி தொடர்பாகவும், நீலப்பட நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் தொடர்பாகவும் டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.