News127வது வயதில் காலமான உலகின் மிக வயதான நபர்

127வது வயதில் காலமான உலகின் மிக வயதான நபர்

-

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான நபர் ஜோஸ் பாலினோ கோம்ஸ் வயது மூப்பு காரணமாக தனது 127வது வயதில் காலமானார்.

அடுத்த வாரம் 128ஆவது வயதில் அடிவைக்க இருந்த நிலையில், கோம்ஸ் உயிரிழந்துள்ளார்.

கோம்ஸின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மினாஸ் ஜெரைஸில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் கோம்ஸ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவில் உள்ள காரிகோ டொஸ் பியால்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

கோம்ஸின் திருமணச் சான்றிதழின்படி 1917ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி பிறந்தார். இவர், உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர்.

கோம்ஸுக்கு ஏழு குழந்தைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...