Newsமனைவியை விவாகரத்து செய்யப்போகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

மனைவியை விவாகரத்து செய்யப்போகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

-

தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர்.

இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

‘அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி’ என தனது பதிவில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள Bay of Fires பிடித்துள்ளது . இந்த...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகளின் நிலை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகள் குழு ஒன்று, அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளது. கடந்த புதன்கிழமை வட இந்தியாவில் நூறு இந்திய குடியேறிகளை...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

நெருக்கடியில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார சேவை

மேற்கு ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்தில் மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்து மக்களுக்கு மேலும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில்லுக்கு தெற்கே ஹௌடன் ஆற்றின் குறுக்கே உள்ள கெய்ர்ன்ஸ் முதல் ராக்ஹாம்ப்டன் வரையிலான பகுதி,...