கோவிட் சமயத்தில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணத்திற்கு $105 மில்லியன் செலுத்துமாறு குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்திடம் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கூறியுள்ளது.
எந்த வகையிலும் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் இருந்து கழிக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் பொருளாளர் வலியுறுத்துகிறார்.
இது தொடர்பான நிலுவைத்தொகை குறித்து குயின்ஸ்லாந்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் தெரிவித்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் ஆரம்பத்தில், 2 வாரங்களுக்கு ஒரு நபருக்கு $3,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அந்தத் தொகையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் நினைவு கூர்ந்துள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 7,000 பேரிடம் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் பொருளாளர் சுட்டிக்காட்டுகிறார்.