Cinemaஎன்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு - பிரபல நடிகர் வேதனை!

என்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு – பிரபல நடிகர் வேதனை!

-

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் யூடியூப் சேனல் ஒன்றில் தன் சினிமா வாழ்க்கையைக் குறித்துப் பேசினார்.

அப்போது, “கலகலப்பு என்கிற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடித்தேன். அதன்பின், ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும் முத்துக்காளையும் வடிவேலு என்னைக் காண ஆசைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.

நானும் என் குருநாதரைக் காணப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் அவரை தனியறை ஒன்றில் சந்தித்தேன். என்னைப்போலவே நடிக்கிறாய் எனப் பாராட்டினார். பின், முத்துக்காளையும் போண்டாமணியும் அறையைவிட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன்.

ஆனால், வடிவேலு என்னை இருக்க சொல்லி, ஏன் என்னை மாதிரியே நடிப்பேன் எனக்கூறி ஒவ்வொரு கம்பெனியாக ஏறிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படத்தில் நடித்தேன் என்றதுடன் இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் சொன்னேன்.

திடீரென, பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். இது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

வெனிசுலா அதிபரின் வீடியோவை வெளியிட்ட வெள்ளை மாளிகை

அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) ஒரு...

வெனிசுலா விமான சேவை நிறுத்தம் – விமானப் பயணங்களில் கடும் இடையூறு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அகற்ற அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை காரணமாக கரீபியன் பகுதியில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து...

Winter Olympics-இற்கு முன் 2 தங்கப் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலியா

Winter Olympics-இற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு பெண் தடகள வீரர்கள் இரண்டு முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். கனடாவின் கால்கரியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திரா பிரவுன்...