மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், மாநிலத்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அல்பானி நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் நிலத்தில் 05 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
சுமார் 30 வினாடிகள் நீடித்த இந்த அதிர்ச்சியில் உயிர், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேற்கு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிக வலுவான பூகம்பம் 1968 இல் 6.5 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.