Newsடோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

டோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

-

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் வருமானம், விளம்பர வருமானம், தொழில் வருமானம் என ஆண்டிற்கு பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் டோனியின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது 8 வயதை எட்டியுள்ள ஸீவா ராஞ்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி (டாரியன்) ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி கட்டணம் மட்டும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக சில கட்டணங்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோன்று அந்தப் பள்ளியில் போர்டிங் முறையில் படித்தால் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...