பத்தாண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் அரிய நிகழ்வைக் காணும் வாய்ப்பு வரும் 31ஆம் தேதி ஆஸ்திரேலியர்களுக்குக் கிடைத்துள்ளது.
முழு சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டு குணாதிசயங்களையும் கொண்ட சந்திரனை ஒரே நேரத்தில் பார்ப்பது இதன் சிறப்பு.
சாதாரண நிலவை விட 14 சதவீதம் பெரிய நிலவு சூப்பர் மூன் ஆகும்.
ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தோன்றுவதை நீல நிலவு என்பர்.
2029 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு சூப்பர் ப்ளூ நிலவை ஆஸ்திரேலியர்கள் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.