கடந்த நிதியாண்டில், காமன்வெல்த் வங்கி 10.2 பில்லியன் டாலர் லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 4.50 டாலர் ஈவுத்தொகையை வழங்க காமன்வெல்த் வங்கி முடிவு செய்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 17 வீத கொடுப்பனவாகும் என கொமன்வெல்த் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
வட்டி விகித மதிப்பு உயர்வைக் கருத்தில் கொண்டு, கடன் பிரீமியத்தின் அதிகரிப்பு இந்த மிகப்பெரிய லாபத்திற்கு முக்கியக் காரணம் என்பது பொருளாதார ஆய்வாளர்களின் நிலைப்பாடு.