தற்போதைய எல்-நினோ காலநிலை மாற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகளில் வரும் காலங்களில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயை ஒத்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வறட்சியான காலநிலையினால், இந்த ஆண்டு காட்டுத் தீ அபாயம் அதிகமாக இருக்கலாம் என வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை பாதுகாப்பாக எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவசர சேவை அதிகாரிகள் மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.
கடந்த கறுப்பு கோடை காட்டுத் தீயினால் ஒரு உள்ளூர் பிரதேசத்தில் சுமார் 501 வீடுகள் அழிந்தன மேலும் 274 வீடுகள் சேதமடைந்தன.
அதன் 343,000 ஹெக்டேர்களில், 271,000 ஹெக்டேர்களுக்கு மேல், அதாவது 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, காட்டுத் தீயால் அழிக்கப்பட்டுள்ளன.