சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் விக்டோரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அதிநவீன வேகக் கமெராக்களைப் பயன்படுத்தி இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 மாத முன்னோடி திட்டத்தில் மட்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 7,000 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.
சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது வாகனம் வெளியிடும் எச்சரிக்கை சமிக்ஞையை முடக்குவதற்கு கூட சிலர் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 2,800 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் 577 டொலர்கள் அபராதம் மற்றும் 4 டீமெரிட் புள்ளிகள் / முறையற்ற முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் 385 டொலர்கள் அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் விக்டோரியா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.