ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை 13 மாதங்களுக்குப் பிறகு அதிகபட்ச மதிப்பை பதிவு செய்துள்ளது.
மெல்பேர்னில் பல இடங்களில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 02 டொலர் 40 சதத்தை தாண்டியுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள சமீபத்திய தரவுகளின்படி, சிட்னியில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 02 டொலர் 13 சதங்களை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
56 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 02 டொலர் 20 காசுகளை தாண்டியிருந்தது.
எனினும் ஒரு சில இடங்களில் மட்டும் 01 டாலர் 80 சென்ட் விலையில் பெட்ரோல் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் உலகளாவிய எரிபொருள் உற்பத்தி சற்று குறைக்கப்பட்டுள்ளது.