நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு, தொலைதூரப் பகுதிகளில் பணியாற்ற விரும்பும் சுகாதாரப் பணியாளர்களுக்கான உதவித்தொகையை $10,000-லிருந்து $20,000-ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று மாநில முதல்வர் கிறிஸ் மின்ன்ஸ் கணித்துள்ளார்.
இந்த $20,000 தொகுப்பில் சம்பள உயர்வுகள், போனஸ்கள் மற்றும் இதர கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
இது கூடுதல் விடுமுறைகள் – வீட்டு வாடகை கொடுப்பனவுகள் மற்றும் இலவச பயிற்சி வாய்ப்புகளை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
பல தொலைதூரப் பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.