அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது.
ஹவாய் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 80 பேரைக் கொன்ற பேரழிவுகரமான காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.
லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டதால் இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.