கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் கால்பந்து உலகக் கோப்பையின் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் போட்டி இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலியர்கள் நேரலையில் பார்த்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
இந்த போட்டியை 3.69 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், கிட்டத்தட்ட 472,000 பேர் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, நேற்றைய போட்டியை மொத்தம் 4.17 மில்லியன் பேர் நேரலையில் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரும் புதன்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் கால்பந்து அரையிறுதியில் இந்த சாதனை முறியடிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மகளிர் கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி வெற்றி பெற்றால், முழு நாட்டிற்கும் விடுமுறை அளிக்கப் போவதாக பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.