Cinema3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட...

3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட தென்னிந்திய திரைப்படங்கள்

-

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.

அதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடார் 2, ஓஎம்ஜி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மூலமாக இந்திய அளவில் ரூ.390 கோடிக்கும் (1513 கோடி இலங்கை ரூபா) அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது ஜெயிலர், கடார் 2, ஓம்ஜி2 மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் இணைந்து பொக்ஸ் உபிஸ் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஒஃப் இந்தியா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் ரூ.390 கோடிக்கும் அதிகமான வசூல். வார இறுதியில் இந்தியா முழுவதும் 2.10 கோடிக்கும் அதிகமான பேர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளனர்.

நமது சினிமா வரலாற்றில் கடந்த 100 வருடத்தில் இது போன்று வார இறுதி வசூலினை பார்த்ததில்லை. மேலும் கடந்த 10 வருடத்தில் இவ்வளவு அதிகமான நபர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷியல் சினிமா மக்களிடம் சரியாக சென்றுள்ளதை இந்த பொக்ஸ் ஒபிஸ் வசூல் விவரங்கள் தெரிவிகின்றன. காலை காட்சிகள் கூட முழுவதுமாக நிரம்புகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் கொமர்சியல் சினிமாவை விரும்புவர்களுக்கு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. புதிய பாய்ச்சலுடன் சினிமா இயங்குவது மகிச்சியளிக்கிறது. சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்கள்.

நன்றி தமிழன்

Latest news

Coles-ஐ குறிவைத்து கடைகளில் நடக்கும் திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி நிறுவனமான Coles, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கு எதிரான திருட்டு மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மேலும்...

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...