இந்தியா செல்லும் ஆஸ்திரேலியர்கள் கவனமாக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்குக் காரணம், இந்திய மாநிலமான மணிப்பூரில் இந்த நாட்களில் தலைதூக்கும் உள்நாட்டு மோதல்களும் வன்முறைகளும்தான்.
காணி உரிமை மற்றும் அரச வேலைகள் தொடர்பாக 2 பிரதான இனங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களினால் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்களைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது மற்றும் இணைய வசதிகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்களில் இந்தியாவின் மணிப்பூரில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் பொதுக் கூட்டங்களைத் தவிர்க்கவும், எல்லா நேரங்களிலும் ஊடக வெளியீடுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் மத்திய அரசு அறிவுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதால், இந்த நாட்களில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது கவனமாக இருக்குமாறு மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.