சிட்னியில் இருந்து மலேசியா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தவறாக நடந்து கொண்ட நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்பராவில் வசிக்கும் 45 வயதான ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இன்று சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவர் மீது வெடிபொருட்கள் வைத்திருந்தது குறித்து தவறான அறிக்கை அளித்தது உட்பட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் அறிவித்தது.
நேற்று பிற்பகல் 01.40 மணியளவில் புறப்பட்ட MH 122 விமானத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு 03.47 மணியளவில் சிட்னி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக சிட்னி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை 6.30 மணியளவில் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை உத்தரவிட்டது.
194 பயணிகள் இருந்தனர், இந்த சம்பவத்தால் சிட்னி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாகின.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக பதிலளிக்க கிட்டத்தட்ட 03 மணித்தியாலங்கள் எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் நிராகரித்துள்ளது.
விமானங்களுக்குள் போர்க்களத்தை உருவாக்குவதல்ல, பயணிகளின் பாதுகாப்பே மிக முக்கியமான பணி என ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் வலியுறுத்துகிறது.