இந்த ஆண்டு உலகக் கோப்பையில் மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலியா மகளிர் கால்பந்து அணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விடுமுறை அளிக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணியும் எதிர்க்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், இது பிரதமர் அந்தோனி அல்பனீஸின் அரசியல் விளையாட்டு என்று வலியுறுத்துகிறார்.
ஒரு நாள் விடுமுறை என்றால் அவுஸ்திரேலியாவுக்கு 02 பில்லியன் டொலர் நட்டம் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடாகும்.
அணியின் வெற்றியை தனது தனிப்பட்ட வெற்றியாக சித்தரிக்கும் குறுகிய முயற்சியை பிரதமர் மேற்கொண்டு வருவதாகவும் பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடுமுறை திட்டத்திற்கு தேசிய கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாடில்டாஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.