அனைத்து மாநில பிரதமர்களின் பங்கேற்புடன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் தேசிய அமைச்சரவை இன்று பிரிஸ்பேனில் கூடவுள்ளது.
வீட்டுப் பிரச்சனை மற்றும் வாடகைக் கட்டணம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டு வாடகையை அதிகரிப்பதற்கான அனுமதி மற்றும் வாடகைதாரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் கட்சி அரசாங்கத்தால் மத்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வீட்டுவசதி மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான ஆதரவைப் பெறுவது இன்று முக்கிய கவனம் செலுத்தும் தலைப்புகளில் ஒன்றாகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 சமூக நல இல்லங்களை கட்டி முடிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம்.