அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா நிச்சயம் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகரும் என்று பொருளாதார நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
அடுத்த 02 வருடங்களில் நிச்சயமாக பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பதே 90 வீதத்திற்கும் அதிகமான மக்களின் நிலைப்பாடாகும்.
கட்டுமானத் துறையில் ஏற்படும் பின்னடைவு – சக்திவாய்ந்த நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் ஆபத்து பிரதிபலிக்கிறது என்பது இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்றவற்றுக்கு முகங்கொடுத்து தொழில்களை நடத்துவது கடினமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்களில், 43 சதவீதம் பேர் விக்டோரியா மாநிலத்தையும், 36 சதவீதம் பேர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 12 சதவீதம் பேர் குயின்ஸ்லாந்து மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்ற பொருளாதார வல்லுனர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே பொருளாதார மந்தநிலையின் அபாயங்களைக் கணித்துள்ளனர்.