கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவிருக்கிறார்.
கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தந்தையான பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனுக்கு அவர் பிள்ளை இசை துறைக்கு வருவதில் துளியும் நாட்டமில்லை. அதனால் ஐயா சிவசிதம்பரம் அவர்களை மருத்துவதுறையில் சேர்த்து படிக்க வைத்தார்.
இருப்பினும் சிவசிதம்பரம் அவர்களின் வீட்டு சூழலானது எப்பொழுதும் இசையால் நிரம்பியே இருந்ததால் சிறுவயதிலிருந்தே அவருக்கு இசைமேல் நாட்டம் இயற்கையாகவே வந்துவிட்டது.
எனினும் சிவசிதம்பரம் அவர்களின் தந்தை அவரை மருத்துவத்தில் ஆர்வம் காட்டுமாறே கூறு வந்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் நடந்த கலைவிழவில் சிவசிதம்பரம் அவர்கள் பாடல்பாடி பரிசையும் வென்று வந்ததை கண்ட தந்தை கவலையில் கண்ணீர் வடித்தாராம். பின் தன் தாயின் ஆலோசனைக்கு அமைய சிவசிதம்பரம் அவர்களுக்கு தந்தை இசை பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார்.
தற்போது மருத்துவ துறையிலும், இசை துறையிலும் கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் புகழ்பெற்று விளங்குகிரார்.