Newsஅடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை...

அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை ஒப்புதல்

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வீட்டு நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை கட்ட தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக மேலதிகமாக 03 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அன்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் நிலவும் வீட்டு மற்றும் வாடகை வீட்டு நெருக்கடி இதன் மூலம் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

புதிய வீடமைப்புத் திட்டத்தின்படி, திட்டமிடல், வலயப்படுத்தல், காணி விடுவிப்பு மற்றும் மலிவு விலையில் கொள்வனவு ஆகிய கருத்துருக்களின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

வீட்டுப் பிரச்சினைக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகை வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு வாடகைக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்ல என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்தார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...