Newsகுறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசிடம் இருந்து...

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசிடம் இருந்து மானியம்

-

அடுத்த ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் உடையவர்களுக்கு வீடு வாங்க அரசாங்கம் மானியம் வழங்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமான தொழிற்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிதாக கட்டப்படும் வீட்டின் விலையில் 40 வீதம் வரையில் தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் நிவாரணம் பெற முடியும் என்றார்.

ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கும் போது அதிகபட்ச நிவாரணம் 30 சதவீதமாக இருக்கும்.

இதற்குத் தகுதிபெற, ஒரு ஆஸ்திரேலியர் ஆண்டுக்கு $90,000க்கும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் மற்றும் ஒரு ஜோடி ஆண்டு வருமானம் $120,000க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், வாங்கப்படும் சொத்தின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

இந்த முன்மொழிவு கடந்த ஆண்டு நடைபெற்ற தொழிற்கட்சியின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியாகவும் மாறியது.

இதேவேளை நேற்று நடைபெற்ற தேசிய அமைச்சரவையில் அடுத்த 05 வருடங்களில் 12 இலட்சம் வீடுகளை கட்டி முடிக்க அனைத்து மாநில பிரதமர்களாலும் மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...