Newsபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

-

கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸிற்க்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், ‘கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது.

இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்த சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பேசிய இந்த அமைப்பின் இயக்குனர் டொக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை என்றாலும், உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடிக்கிறது.

ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. பிஏ.2.86 என்ற அந்த மாறுபாடு தற்போது கண் காணிக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

இந்த சந்தர்ப்பத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக சுகாதார சபையில் அது ஏற்றுக்கொள்ளப்படும். தொற்றுநோய் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் திருத்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளன.

நாளை (இன்று) முறைப்படி தொடங்கப்படும் டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான உலகளாவிய முன்முயற்சியை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் அனைத்து ஜி20 நாடுகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது டிஜிட்டல் சுகாதாரத்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய வியூகங்களை ஆதரிப்பதுடன், உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சான்றிதழ் நெட்வொர்க் உள்பட பிற முயற்சிகளையும் வலுப்படுத்தும்.இவ்வாறு உலக சுகாதார அமைப்பு இயக்குனர் தெரிவித்தார்.

Latest news

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளில், ஆஸ்திரேலியா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, 317 மொழிகளைக் கொண்ட ஆஸ்திரேலியா, உலகில் அதிக மொழிகளைக் கொண்ட நாடுகளில்...

விசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக...

அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் என்று பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க தாம் ஆதரவளிக்கப்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

சாதனைகளை முறியடித்துள்ள மெல்பேர்ண் வெப்பம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ணில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதம் தொடங்க இன்னும் ஒரு...