Cinemaவிரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் 'ஜெயிலர்'

விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ‘ஜெயிலர்’

-

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது.

தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டு இருந்தது.

அதில் முதல் வாரம் ஜெயிலர் உலகம் முழுவதும் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. இரண்டாவது வாரத்திலும் வசூலை பெற்றுள்ளது. தமிழகத்தில் எட்டு நாட்களில் ரூ.235 கோடி வசூலித்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஜெயிலரின் இந்த ஆட்டம் இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.

2வது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...