NewsAmazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

Amazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

-

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான சைலேஷ்க்கு மாதந்தோறும் 2 லட்ச ரூபாயை வருமானமாக கொடுத்து வருகிறார் Amazon.

விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த நல்லபெருமாள்- முத்துலட்சுமி தம்பதியின் மகன் சைலேஷ், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சைலேஷ், பெற்றோர் இஸ்திரி செய்யும் வேலை பார்த்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலையை அறிந்த சைலேஷ்க்கு தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மொபைல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், செயலிகள் (Apps) குறித்து கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தொடர்ந்து சொந்தமாக 3 செயலிகளை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார், தற்போது உலகின் பிரபலமான நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதாவது புதுப்புது செயலிகளை உருவாக்கும் பணிக்கு அமேசான் சைலேஷுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கேம் விளையாட செல்போனை பயன்படுத்திய சைலேஷ் , தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் தற்போது அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறியுள்ளார். மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஆர்வம் சைலேஷை நல்ல நிலைமைக்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் முறையான வழிகாட்டுதலில் செயலலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனக்கு கணினி ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...