அடுத்த 5 வருடங்களில் அவுஸ்திரேலியாவில் மீண்டும் கடுமையான காட்டுத் தீ ஏற்படக்கூடும் என வானிலை திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை ஆண்டுக்கு 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதன் தாக்கத்தை அதிகம் உணரும் என்றும், 2019-20ல் ஏற்பட்ட காட்டுத்தீ போன்ற சூழல் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டு என்ற சாதனை அடுத்த சில ஆண்டுகளில் முறியடிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் அதிகரிப்பு – எரிபொருள் எரிப்பு ஆகியவை இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.