NewsTwitter-ல் மேலுமொரு வசதியை நீக்கப்போகும் எலான் மஸ்க்

Twitter-ல் மேலுமொரு வசதியை நீக்கப்போகும் எலான் மஸ்க்

-

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ப்ளொக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய எலான் மஸ்க் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை இஷ்டத்துக்கு மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற சந்தா கட்டணத்தை அறிவித்தார். அண்மையில் ட்விட்டர் தளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். சந்தா கட்டணம் செலுத்திய கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு பகுதியை வழங்கும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

அந்த வகையில் தற்போது இன்னொரு மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளொக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய இயலும். அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது. இது எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளொக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும். இந்த வசதியை நீக்குவதால் பின்னூட்டங்களில் வரும் வசைச் சொற்களையும், ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கெனவே ப்ளொக் செய்யப்பட்ட பயனர்களின் கணக்குகளும் தானாகவே அன்ப்ளொக் ஆகுமா என்பது குறித்து இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ப்ளொக்கிங் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஏப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும். இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பயனர்கள் எதிர்கொள்ளும் ஒன்லைன் தாக்குதல்களை ஃபில்டர் செய்யும் வசதிகளை செயலிகள் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....