Cinemaஅதிக சொத்து சேர்த்த ஆசிய நடிகைகள் யார் தெரியுமா?

அதிக சொத்து சேர்த்த ஆசிய நடிகைகள் யார் தெரியுமா?

-

ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார்.

இவரது சம்பளம் 20 மில்லியன் டொலர். கடந்த 2018 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள்.

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...