இந்திய வம்சாவளியான மினாள் படேல் (வயது 44) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கோல்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறி வைத்து தொடர்பு கொண்டனர்.
அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் மருத்துவர் கையெழுத்தை பெற அவர்களுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளனர்.
கடந்த 2016-2019 காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான போலியான மருத்துவ பரிசோதனைகளை இந்த நிறுவனம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இதன்மூலம் சுமார் ரூ.174 கோடி வரை படேல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இதில் படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அவரது சொத்து பறிமுதல் வழக்கு வருகின்ற 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நன்றி தமிழன்