Newsமனைவி-மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர்

மனைவி-மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர்

-

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று தெரியவந்துள்ளது.

அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி பகுதியில் வசித்த அவர்கள் கடந்த 18 ஆம் திகதி துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை பொலிஸார் கண்டு பிடித்தனர்.

விசாரணையில் நாகராஜப்பா, தனது மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...