ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தென் சீனக் கடலில் முத்தரப்பு கடற்படை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளன.
கடற்படை நடவடிக்கைகளில் சீனாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
தென் சீனக் கடலில் அண்மையில் பிலிப்பைன்ஸ் கப்பல் சீன ஆயுதப் படைகளால் தாக்கப்பட்டதை அடுத்து, பிராந்திய சக்திகள் பிலிப்பைன்ஸுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
எவ்வாறாயினும், தமது கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சீன கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திட்டமிடப்பட்ட கடற்படை பயிற்சிக்காக 03 போர் விமானங்கள் மற்றும் ஜப்பானின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று உட்பட பல விமானங்களும் சேர்க்கப்பட உள்ளன.
பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக பிலிப்பைன்ஸுக்கு இம்முறை இப்பயிற்சியில் பங்குகொள்ள வாய்ப்பில்லை என்பதுடன் எதிர்கால நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.