Newsஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

-

இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

தோல் தயாரிப்புகள், மின்னனு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

‘சிறப்பு வர்த்தக நாடு’ என அங்கிகாரம் கொடுத்து குறைவான வரிகளை இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கிறது. பொதுவாக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் கூடுதல் வரி விதிக்கும். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 200 சதவீதம் வரை அதிகம் வரி வசூலிப்பதாக தெரிவித்து இந்திய வரி விதிப்பு முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி வரி வேறுபாட்டால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என தெரிவித்து சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தபோவதாக அச்சுறுத்தினார். இதனால் அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் பேட்டி கண்டது.

அதில் இந்தியாவுக்கான தனது பொருளாதார நிலைப்பாடு மாறவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

‘வரிவசூல் ராஜா’ என இந்திய நாட்டை சுட்டிக்காட்டிய அவர் அமெரிக்கா நாட்டின் மதுபானங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து குறிப்பிட்டார்.

‘பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வரி விதிக்கப்படுவது இல்லை’ என தெரிவித்த அவர் ‘தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரிவிதிக்கப்படும்’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ‘அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்யப்பட்டால் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிவிதிக்க வேண்டும். அது பழிவாங்கல் என சொல்லப்பட்டாலும் சரி’ என தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து...

வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ள Tesla-வின் ஆண்டு விற்பனை

வரலாற்றில் முதன்முறையாக Tesla நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை 2ம் திகதி பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் EVகளுக்கான மந்தமான தேவை காரணமாக விற்பனை...

ஜனவரியில் விக்டோரியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்

ஜனவரியில் விக்டோரியாவில் தவறவிடக்கூடாத இடங்கள் குறித்த அறிக்கையை timeout சமர்ப்பித்துள்ளார். இவற்றில் விக்டோரியாவில் வாழும் பலர் கூட இதுவரை சென்றிராத இடங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியாவில் கடற்கரையிலிருந்து தேசிய...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய...