சாம்சங் மீது அதிக நுகர்வோர் புகார்களை நியூ சவுத் வேல்ஸ் பெற்றுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் தரச் சிக்கல்கள்/ மறுபரிமாற்றத்தில் உள்ள சிரமங்கள் காரணமாக நுகர்வோர் அளித்த புகார்களின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டில் இதுவரை சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக 416 புகார்களும், Tru Water பிராண்டிற்கு எதிராக 321 புகார்களும், Ticketek மீது 281 புகார்களும் பதிவாகியுள்ளன.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைப் பிரச்சினைகள் தொடர்பாக வருடாந்தம் சுமார் எட்டாயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதுடன், 2023ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 38,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களின் புகார்களை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நியாயமான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் சாம்சங் மன்னிப்பு கேட்டுள்ளது.