நியூ சவுத் வேல்ஸில் உள்ள பள்ளிகளில் மழலையர் பள்ளி முதல் தரம் 10 வரை சைகை மொழியைக் கற்பிக்கும் திட்டம் உள்ளது.
செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தற்போதுள்ள சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறையை சமாளிக்க இது உதவும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இதைப் படிப்பது கட்டாயமில்லை, ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே இதைப் பாடமாகப் படிக்க முடியும்.
2026 முதல், நியூ சவுத் வேல்ஸ் பாடத்திட்டத்தில் சைகை மொழி சேர்க்கப்படும்.
அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.