Cinemaபிரகாஷ் ராஜ் மீது முறைப்பாடு

பிரகாஷ் ராஜ் மீது முறைப்பாடு

-

சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்யும் தொனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட சமூக வலைதள பதிவு சர்ச்சையான நிலையில், பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பினரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தாதார்.

அதில், ஒரு நபர் பனியன், லுங்கியில் ஒரு கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் இடம்பெற்றிருந்தது.

கூடவே ‘நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ் பகிர்ந்த கருத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள், இந்தியாவின் ஒரு இலட்சியப் பயணத்தை நகைச்சுவையாக்கி விட்டதாக பிரகாஷ் ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சூதரளவயளமiபெ என்ற ஹேஷ்டேகின் கீழ் நீண்ட காலமாக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதுவும் குறிப்பாக அவருடைய பால்ய வயது தோழியான எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷின் படுகொலைக்குப் பின்னர் அவருடைய விமர்சனங்கள் மிகக் கடுமையாக தாக்கியுள்ளன.

இந்நிலையில், அவருடைய முந்தைய ட்விட்களில் பிரதமரை டீ விற்கும் நபர் என்று பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளதால் நேற்று அவர் வெளியிட்ட கேலிச்சித்திரமும் பிரதமரை கிண்டல் செய்யவே பகிரப்பட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், ‘வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன். கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட இரசிக்க முடியவில்லை என்றால். கொஞ்சம் வளருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...