Newsவெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

வெற்றிகரமாக நிலவில் இறங்கியது சந்திரயான்-3ன் விக்ரம்

-

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. 

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

தரையிறங்கியது லேண்டர் கலன்

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது. 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது. 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி: இஸ்ரோ

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ள Mpox நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு...

10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12...

பொழுதுபோக்கை வணிகமாக மாற்றி ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை பிசினஸ் விக்டோரியா உங்களுக்கு வழங்கியுள்ளது. பொழுதுபோக்கை ஒரு வணிகமாக வளர்ப்பதே இதன் நோக்கமாகும், மேலும் வணிகமாக மாற்றக்கூடிய பல...

திரும்பப் பெறப்படும் பிரபலமான குழந்தை தொட்டில்

ஆஸ்திரேலிய தாய்மார்கள் மத்தியில் பிரபலமான குழந்தை தொட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் காரணமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சுவாசிப்பதில் சிரமம் குறித்து தயாரிப்பு பாதுகாப்பு ஆஸ்திரேலியா வெளியிட்ட...

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியன் குடியிருப்பாளர்கள் இந்த மாதம் முழுவதும் "The Victorian Seniors Festival" இல் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. விக்டோரியா மாநிலம் முழுவதும் முதியோர்கள்...