விற்பனை சரிவு காரணமாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வரும் டோமினோஸ் பிட்சா உணவக சங்கிலியில் பணியிடங்களை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் சுமார் 200 பேர் வேலையிழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12 மாதங்களில் உலகம் முழுவதும் 395 புதிய கடைகள் திறக்கப்பட்டதன் காரணமாக, Domino’s Pizza விற்பனை முந்தைய ஆண்டை விட 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் பீட்சாவின் விலை உயர்வு, டெலிவரி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் அவர்களின் லாபம் குறைந்துள்ளது.
தற்போது, டென்மார்க்கில் உள்ள அனைத்து Domino’s Pizza உணவகங்களும் மூடப்பட்டுள்ளன, மேலும் பல நாடுகளில் உள்ள சில உணவகங்கள் மூடப்பட உள்ளன.
இதன் மூலம், 2023-2024 நிதியாண்டில், 50 முதல் 60 மில்லியன் டாலர்கள் வரை சேமிக்க எதிர்பார்க்கின்றனர்.