கார்னார்வோனில் தற்போதுள்ள மதுபானக் கட்டுப்பாடுகளை மற்ற பகுதிகளில் அமல்படுத்துமாறு மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை மாநில அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிம்பர்லி, பில்பரா மற்றும் கோல்ட்ஃபீல்ட் பகுதிகளில் மதுக் கட்டுப்பாடு விதிகளின் கீழ், குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பானங்களைத் தவிர அனைத்து வகையான மதுபானங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறந்தது என்று காவல்துறை ஆணையர் கிறிஸ் டாசன் மேலும் கூறுகிறார்.
கார்னர்வோனின் மதுக் கட்டுப்பாடுகள் குற்றச்செயல்களை 40 சதவீதம் குறைத்துள்ளதாக காவல்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மதுவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மாநிலம் முழுவதும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்பிற்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று காவல்துறை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
எவ்வாறாயினும், மதுபான அனுமதிப்பத்திரக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேலதிக கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை தேவை என அரச அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.