$154 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறைகளில் சிறுநீர் கழிக்கும் வசதி இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு ஆஸ்திரேலியா மாநில கிரிக்கெட் சம்மேளன உறுப்பினர்களிடம் கூட கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அதிகபட்ச செயல்திறனை அடையும் நோக்கில் கழிவறை அமைப்பில் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளதாக பெர்த் கிரிக்கெட் மைதான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் எதிர்வரும் 1 1/2 வருடங்களில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய சிரமங்கள் தொடர்பில் பார்வையாளர்கள் கவனம் செலுத்தவில்லை என பல தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.