Cinemaயோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் - நடிகர் ரஜினிகாந்த்

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

-

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்திருப்பதால் ஒட்டுமொத்த படக்குழுவுமே மகிழ்ச்சியில் உள்ளது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். ஆனால், அதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானாது. அவருக்கு வயது 51 ஆகும் நிலையில் ரஜினிகாந்துக்கு 72 வயதாகிறது. தன்னைவிட மிக மிக இளம் வயதுடையவரின் காலில் ரஜினிகாந்த் விழலாமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது சென்னை திரும்பியவுடன் பதில் அளித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என கூறியுள்ளார்.வ்

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...