Newsஇந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்த சீனா

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்த சீனா

-

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் அரிய காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்துள்ளது. இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மிகவும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.

ஆனால் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ், இந்தியாவின் விண்வெளி திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு சந்திரயான் திட்டத்தை கேலி செய்துள்ளது.

குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது. 2010 இல் சாங்இ-2 ஏவப்பட்டதில் இருந்து, சீனா ஒரு ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ளது.

ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் காரணமாக இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை. சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பம் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது.

சீனா பயன்படுத்தும் எரிபொருள் மிகவும் மேம்பட்டது. சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது, இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் நிலவில் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும். நிலவு இரவை தாக்குபிடிக்க முடியாது (ஒரு சந்திர நாள் என்பது 14 பூமி நாட்களுக்கு சமம்.) இதற்கு மாறாக, சீனாவின் யுடு-2 ரோவர் நிலவின் மேற்பரப்புக்கு அருகில் உள்ளது.

நீண்ட காலம் பணிபுரிந்த சாதனையை இது கொண்டுள்ளது. ஏனென்றால், அது அணுசக்தியுடன் கூடியது, அதனால் அது நீண்ட நேரம் செயல்படும். இந்தியாவும் சீனாவும் விண்வெளித் துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் விண்வெளித் திட்டத்துடன் ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் சீனா திறந்திருக்கும் என்றும் அந்த குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதை குளோபல் டைம்ஸ் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...